புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அங்கன்வாடியில் 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முக்கிய குற்றவாளி காசி உயிரிழந்த நிலையில் உடந்தையாக இருந்த 2 பெண்களுக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அன்னக்கொடி, வைரம் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையுடன் தலா ரூ.25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
+
Advertisement