சென்னை: பாலியல் புகாரில் அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து ஐஐடி பேராசிரியர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக அளிக்கப்பட்ட புகார் மீதான விசாரணை அடிப்படையில் சென்னை ஐஐடி பேராசிரியருக்கு ஐஐடி இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். விசாரணைக் குழுவின் அறிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஐடி பேராசிரியர் மனு தாக்கல் செய்திருந்தார். விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் அதில் தலையிட முடியாது என ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.
+
Advertisement