கெங்கவல்லி: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் சங்கர் (எ) சேகோ சங்கர் என்பவரை, ஆத்தூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், சங்கர் வகித்து வந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
+
Advertisement

