சென்னை: திரு.வி.க.நகரில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். திரு.வி.க நகர் தொகுதி, 6வது மண்டலம், 76 மற்றும் 77 வது வட்டம், கே.எம். கார்டன் மற்றும் தட்டான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் 77வது வட்டம், தட்டான்குளம் பகுதியில் கழிவுநீர் வெளியேற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள கழிவுநீர் உந்து நிலையம் பழுது ஏற்பட்டதால் கழிவுநீர் சாலையில் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது,
இந்த பழுதினை உடனடியாக சரி செய்யப்பட்டதினை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு கொட்டும் மழையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிவுநீர் தேங்காமல் இருக்க பணிகளை துரிதப்படுத்துமாறும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற பழுதுகள் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மேயர் பிரியா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சாமிக்கண்ணு, தமிழ்வேந்தன், மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி சசிகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.