சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தென்பெண்ணையில் கலக்கக்கூடாது: கர்நாடக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
டெல்லி: சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தென்பெண்ணை ஆற்றில் கலக்கக்கூடாது என கர்நாடக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படுவதை கர்நாடக அரசு தடுக்க வேண்டும். கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை பொங்கிச் செல்வதை தடுக்க உடனடியாக இடைக்கால நடவடிக்கை எடுக்க பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.