செப்டம்பரில் சரக்கு மற்றும் சேவை வரியால் ரூ.1.89 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது: ஒன்றிய அரசு தகவல்
டெல்லி: செப்டம்பரில் சரக்கு மற்றும் சேவை வரியால் ரூ.1.89 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால் விற்பனை அதிகரித்ததன் காரணமாக வரி வசூல் அதிகரித்ததாக அரசு விளக்கமளித்துள்ளது. 2024 செப்.ல் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.73 லட்சம் கோடியாகவும் 2025 ஆகஸ்டில் ரூ.1.86 லட்சம் கோடியாகவும் இருந்தது. மொத்த வரி வருவாயில் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் 6.8% அதிகரித்து ரூ.1.35லட்சம் கோடியாக உள்ளது. இறக்குமதிப் பொருள்கள் மீதான வரி 15.6% அதிகரித்து ரூ.52,492 கோடியாக உயர்ந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கூடுதலாகச் செலுத்தப்பட்டு, திருப்பி அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை ரூ.28,657 கோடி என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது.