எதற்கெடுத்தாலும் செந்தில் பாலாஜி மீது பழியா? விஜய் தொண்டர்களை பார்க்காததே 41 பேர் உயிரிழந்ததற்கு காரணம்: ஜான்பாண்டியன் பரபரப்பு பேட்டி
தென்காசி: தென்காசியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நேற்று அளித்த பேட்டி: கரூர் கூட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் ஏறி விழுந்து நெருக்கடியால் 41 பேர் இறந்துள்ளனர். நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு விஜய் வந்திருக்க வேண்டும். விஜய்யின் தவறு என்னவெனில் பேருந்தில் இருந்து தலையை வெளியே காட்டாமல் உள்ளேயே இருந்து கொண்டார். வெளியே நிற்கும் மக்களுக்கு தலையை காண்பித்து இருந்தால் அப்படியே பார்த்துவிட்டு இடத்தை விட்டு நகர்ந்து இருப்பார்கள். காவல்துறை பாதுகாப்பு கொடுத்ததை மறுக்க முடியாது. நெரிசலில் பலர் சிக்கி பலியானதை கேள்விப்பட்டவுடன் உடனடியாக விஜய் மருத்துவமனைக்கு சென்று வேண்டிய உதவிகளை செய்திருக்க வேண்டும். இன்றுவரை பார்க்காதது கண்டனத்திற்குரியது. மிகப்பெரும் தவறு. சிபிஐ விசாரணை கேட்பதெல்லாம் கண் துடைப்பு. எதற்கெடுத்தாலும் செந்தில் பாலாஜி மீது பழியை போடுவது அநியாயம். இதனை அரசியலாக்குவதற்காக அவர் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.