சென்னை: ஆம்பூர் கலவர வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கு பிரிவின் கீழ் 7 பேருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு தண்டனையை ஐகோர்ட் நிறுத்தி வைத்தது. பைரோஸ் அகமது, முனீர், சாதிக், அகமது, ஜான் பாஷா உள்பட 7 பேர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். தண்டனையை நிறுத்தி வைத்த உயர்நீதிமன்றம், 7 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement