மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு முரசொலி செல்வம் விருது: திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படுகிறது
சென்னை: மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு முரசொலி செல்வம் விருது வழங்கப்படுகிறது. ஊடகத்துறையில் ஐம்பது ஆண்டுகால அனுபவம் பெற்றவரும் - ‘தி இந்து’, ‘பிசினஸ் இந்தியா’, ‘அவுட் லுக்’ ஆகிய பத்திரிகைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவரும் - இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் Reuters Fellow-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றிய-மாநில அரசு உறவுகள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டவரும்-பத்து ஆண்டுகள் தெற்காசிய ஊடக வளர்ச்சி நிறுவனமான pans south asia-வின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டவரும்-
அதே காலத்தில் Global forum for Media Develpment-ன் துணைத் தலைவராகப் பணியாற்றியவரும் - தற்போது, தமிழ்நாடு அரசு புதிதாக நிறுவியுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வருபவரும்-கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலை உலகப் புகழ்பெற்ற பெங்குயின் நிறுவனத்திற்காக ஆங்கிலத்தில் “Karunanidhi -A Life” என்ற நூலை எழுதியவருமான மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு 2025ம் ஆண்டிற்கான ‘முரசொலி செல்வம்’ விருது வழங்கப்படுகிறது என முரசொலி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
2025ம் ஆண்டிற்கான ‘முரசொலி செல்வம்’ விருது வருகிற 17ம் தேதி மாலை 6 மணியளவில் கரூர், கரூர் பை-பாஸ் சாலை, கோடங்கிபட்டியில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவரும்- தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட இருக்கிறது.