சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஜெ.நிஷா பானுவை, கேரள உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஜெ.நிஷா பானுவை, கேரள உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து கொலிஜியம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54-ஆக குறைந்து காலியிடம் 21-ஆக அதிகரித்துள்ளது.