காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) வயது மூப்பால் காலமானார்..!!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) வயது மூப்பால் காலமானார். 2004 முதல் 2008 வரை ஒன்றிய உள்துறை அமைச்சராக சிவராஜ் பாட்டீல் பதவி வகித்தார். 2008ல் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்தார். 1980ல் தேசிய அரசியலில் தடம் பதித்த சிவராஜ் பாட்டீல் 7வது மக்களவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 10வது மக்களவை சபாநாயகராக பதவி வகித்த சிவராஜ் பாட்டீல், பொதுவாழ்வில் 40 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளை வகித்தார்.


