புதிதாக 10 ஆயிரம் முதியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதிதாக 10 ஆயிரம் முதியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் புதிதாக 500 அங்கன்வாடி ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஒவ்வொரு மாதமும் 18ம் தேதி முதியோருக்கு உதவித் தொகை தரப்படும்.