ஈரோடு: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். முன்னதாக, அவர் அளித்த பேட்டி: அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாஜ தலைமையிலான கூட்டணியில் இருந்த டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியதுடன் தற்போது அதிமுகவில் மூத்த நிர்வாகியாக இருக்கக்கூடிய செங்கோட்டையன், கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு நிலவுகிறது. ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லாமல் வலுவான கூட்டணியாக உள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பின்னணியில் பாஜ இருக்கலாம் என கூறப்படுகிறது. எனக்கு கிடைத்த தகவலின் படி, ஒன்றுப்பட்ட அதிமுக இருக்க வேண்டும் என்று பாஜ வலியுறுத்தியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை என்றும் தெரிகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.
+
Advertisement