சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கை: சமூக நீதி கொள்கையின் பிதாமகன் பெரியாரை விமர்சிக்கும் ஆரியர்களின் விஸ்வாசி சீமான், திமுக, அதிமுக வார்த்தை விளையாட்டு அரசியலை செய்வதாக விமர்சிக்கிறார். இவருக்கு சுதந்திர பசி, வரலாற்று பசி இருக்குதாம். நாங்கள் அறிந்தவரை சீமானுக்கு சுகபோக வாழ்க்கை பசி மட்டுமே இருப்பதாகத்தான் சீமானுடைய கடந்தகால, நிகழ்கால வாழ்வியல் உணர்த்துகிறது.
அதிமுக, திமுகவிற்கு மாறி, மாறி வாக்களிப்பது பிசாசை விவாகரத்து செய்துவிட்டு பேயை கல்யாணம் செய்வது, பிறகு பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசை கல்யாணம் செய்வதாக விமர்சித்துள்ளார். திராவிட கட்சிகள் பெரியார், அண்ணாவை பின்பற்றுகிறதாம், சீமானோ அண்ணன் வழியில் செல்கிறாராம். மோசடி குற்றச்சாட்டு, பாலியல் குற்றச்சாட்டு, பொய், பித்தலாட்ட பேச்சு இதுதான் போராளிகளின் வழியா? கெட்டுப்போன உணவு பொருள்களை கொண்டு அறுசுவை உணவை தயாரிக்க இயலாது, இது சீமானுக்கு பொருந்தும். இவ்வாறு கூறியுள்ளார்.