சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்டுக் கோப்பாக ஒருங்கிணைந்து செயல்படுவதால் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜவை தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணியில் சேர தயாராக இல்லை. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்றாலும் இந்த 41 தொகுதிகளில் அதிதீவிர திருத்தம் மேற்கொண்டு பாஜவின் வெற்றி வாய்ப்பிற்கு அடித்தளம் அமைக்கும் திரைமறைவு முயற்சிகளை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். எனவே வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்திருப்பவர்களை வாக்காளர்களாக இணைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த விரைவில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க இருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் இதனை அனுமதிக்க முடியாது என்கிற வகையில் தீவிர முயற்சிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
+
Advertisement


