மனித உறுப்புகளை பொருட்கள்போல் விற்பனை செய்வது ஏற்கத்தக்கதல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கண்டனம்
மதுரை: மனித உறுப்புகளை பொருட்கள்போல் விற்பனை செய்வது ஏற்கத்தக்கதல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நோயாளிகளின் உறுப்புகளை மருத்துவர் தனது சொந்த தேவைகளுக்கு விற்பது கொடூரமானது. கிட்னி எப்பொழுது திருடப்பட்டது என்பது கூட தெரியாமல் வாழ்வது எவ்வளவு பெரிய வேதனை. கிட்னி விற்றது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.