Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்வு நடைமுறைகள் முடிந்த பிறகு காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்த அறிவிப்பு ரத்து: இயற்கை-யோகா மருத்துவர்கள் நியமன வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த 3 இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று மருத்துவ தேர்வு வாரியம் 2020ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக அப்போது தேர்வு நடத்தப்படவில்லை. பின்னர், இந்த காலியிடங்களின் எண்ணிக்கையை 35ஆக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், 2025 மார்ச் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கையை 35ல் இருந்து 54ஆக அதிகரித்து கடந்த ஏப்ரல் மாதம் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து சித்தார்த், அண்ணாமலை, அமிர்த செல்வராஜன் ஆகிய மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், இந்த வழக்கில் அசாதாரண சூழல் ஏதுமில்லை. எனவே, காலியிடங்களின் எண்ணிக்கையை 35ல் இருந்து 54ஆக அதிகரித்த அறிவிப்பு ரத்து ெசய்யப்படுகிறது. தேர்வு நடைமுறைகள் முடிந்த பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.ஏற்கனவே, நடத்தப்பட்ட தேர்வு அடிப்படையில் 35 காலியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.