தமிழ்நாட்டில் 46 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு: டிஜிபி வெங்கடராமன் இன்று ‘முதலமைச்சர் கோப்பை’ வழங்குகிறார்: சென்னையில் ஐஸ்அவுஸ் உட்பட 4 நிலையங்கள் இடம்பிடித்தது
சென்னை: தமிழகத்தில் 46 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஐஸ்அவுஸ்,முத்தையால்பேட்டை, மதுரவாயில், மடிப்பாக்கம் காவல் நிலையங்கள் இடம்பிடித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட சிறந்த காவல்நிலையங்களுக்கு இன்று தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் ‘முதலமைச்சர் கோப்பை’ வழங்குகிறார்.
தமிழகம் முழுவதும் 1,321 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், 244 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 290 போக்குவரத்து காவல் நிலையங்கள் என மொத்தம் 1,902 காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் மீது நடவடிக்கை, குற்றவாளிகள் கைது செய்வது, குற்றங்கள் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளின் படி சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையங்களாக 46 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டது.
அதில் மதுரையில் உள்ள எஸ்எஸ் காலனி காவல்நிலையம், திருப்பூர் டவுன் காவல் நிலையம், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி காவல் நிலையம் என 3 சிறந்த காவல் நிலையங்களுக்கு குடியரசு தின விழாவின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பை மற்றும் சான்றுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அதைதொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 46 சிறந்த காவல் நிலையங்களில் முதல்வர் கோப்பை வழங்கிய 3 சிறந்த காவல் நிலையங்களை தவிர்த்து மற்ற 43 காவல் நிலையங்களுக்கு இன்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் சிறந்த காவல் நிலையங்களுக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை செய்துள்ளது.
அதன்படி 2023ம் ஆண்டு சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையங்கள் விபரம் வருமாறு:
சென்னை பெருநகர காவல் துறையில் முத்தியால்பேட்டை, மதுரவாயல், ஐஸ்அவுஸ், மடிப்பாக்கம் ஆகிய 4 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகர காவல் எல்லையில் சங்கர்நகர் காவல் நிலையம். ஆவடி மாநகர காவல் எல்லையில் எண்ணுர் காவல் நிலையம். கோவை மாநகர காவல் எல்லையில் காட்டூர் காவல் நிலையம்.
திருச்சி மாநகர காவல் எல்லையில் கோட்டை காவல் நிலையம். சேலம் மாநகர காவல் எல்லையில் அன்னதானப்பட்டி காவல் நிலையம். திருநெல்வேலி மாநகர காவல் எல்லை யில் பெருமாள்புரம் காவல் நிலையம்.
* வடக்கு மண்டலம்:
செங்கல்பட்டு மாவட்டம் - செங்கல்பட்டு நகர காவல் நிலையம். காஞ்சிபுரம் மாவட்டம் - காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம். விழுப்புரம் மாவட்டம் - கோட்டாகுப்பம் காவல் நிலையம். கடலூர் மாவட்டம் - பண்ரூட்டி காவல் நிலையம். கள்ளக்குறிச்சி மாவட்டம் - கச்சிரபாளையம் காவல் நிலையம். வேலூர் மாவட்டம் - வேலூர் வடக்கு காவல் நிலையம்.
திருவண்ணாமலை மாவட்டம் - போளூர் காவல் நிலையம். திருப்பத்தூர் மாவட்டம் - திருப்பத்தூர் டவுன் காவல் நிலையம். ராணிப்பேட்டை மாவட்டம் - வாலாஜா காவல் நிலையம்.
* மேற்கு மண்டலம்:
சேலம் மாவட்டம் - ஓமலூர் காவல் நிலையம். தருமபுரி மாவட்டம் - ஆரூர் காவல் நிலையம். நாமக்கல் மாவட்டம் - நாமக்கல் டவுன் காவல் நிலையம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் - கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையம். கோவை மாவட்டம்-மேட்டுப்பாளையம் காவல்நிலையம். ஈரோடு மாவட்டம் - ஈரோடு தெற்கு காவல் நிலையம்.
நீலகிரி மாவட்டம் - ஊட்டி நகர சென்ட்ரல் காவல் நிலையம். திருப்பூர் மாவட்டம்-உடுமலைபேட்டை காவல் நிலையம்.
* மத்திய மண்டலம்:
திருச்சி மாவட்டம் - மணச்சநல்லூர் காவல் நிலையம். புதுக்கோட்டை மாவட்டம் - அறந்தாங்கி காவல் நிலையம். அரியலூர் மாவட்டம் - ஜெயங்கொண்டம் காவல் நிலையம்.
பெரம்பலூர் மாவட்டம் - பெரம்பலூர் காவல் நிலையம். கரூர் மாவட்டம் - கரூர் டவுன் காவல் நிலையம். தஞ்சை மாவட்டம் - தஞ்சை டவுன் கிழக்கு காவல் நிலையம்.
நாகப்பட்டிணம் மாவட்டம் - வெளிப்பாளையம் காவல் நிலையம். திருவாரூர் மாவட்டம் - திருத்துறைப்பூண்டி காவல் நிலையம். மயிலாடுதுறை மாவட்டம் - சீர்காழி காவல் நிலையம்.
* தெற்கு மண்டலம்:
மதுரை மாவட்டம் - உசிலம்பட்டி டவுன் காவல் நிலையம். விருதுநகர் மாவட்டம் - மல்லாங்கிணறு காவல் நிலையம்.திண்டுக்கல்-திண்டுக்கல் டவுன் வடக்கு காவல் நிலையம்.
தேனி மாவட்டம் - கூடலூர் வடக்கு காவல் நிலையம். ராமநாதபுரம் மாவட்டம் - கமுதி காவல் நிலையம்.சிவகங்கை மாவட்டம் - சிவகங்கை டவுன் காவல் நிலையம்.
திருநெல்வேலி மாவட்டம் - முன்னேர்பள்ளம் காவல் நிலையம். தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம். தென்காசி மாவட்டம் - பாவூர்சத்திரம் காவல் நிலையம்.
கன்னியாகுமரி மாவட்டம் - எரானியல் காவல் நிலையம்.