பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டம் இந்திராவதி தேசிய பூங்கா அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீது நக்சல்கள் நேற்று காலை 10 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.
பல மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் 6 நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் இருந்து நக்சல்களின் உடல்கள், தானியங்கி துப்பாக்கிகள், ஐஎன்எஸ்ஏஎஸ் ரைபிள்கள், ஸ்டென் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
