சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை -நக்சலைட்கள் இடையே 2வது நாளாக தொடரும் துப்பாக்கிச் சண்டை: 18 நக்சலைட்கள் சுட்டுக்கொலை
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் ஒரு உயர் தளபதியும் இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு காட்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
ஆரம்பத்தில் 12 நக்சலைட்டுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால் தெற்கு பஸ்தார் பிராந்தியத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் (டிஐஜி) கமாலோச்சன் காஷ்யப் மேலும் ஆறு உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடமிருந்து ஏகே-47 மற்றும் ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

