உலகிலேயே ரகசியமான அமைப்பு ஆர்எஸ்எஸ்சுக்கு நிதியுதவி எங்கிருந்து வருகிறது: கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே கேள்வி
பெங்களூரு: கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே நேற்று அளித்த பேட்டியில், ‘ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கைப்பாவை பாஜ. உலகிலேயே ரகசிய அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஏன் இவ்வளவு ரகசியம். ஆர்எஸ்எஸ் இல்லாவிட்டால் பாஜ இல்லை. மதம் இல்லை என்றால் ஆர்எஸ்எஸ் இல்லை. ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு நான் எதிரானவன். பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பு ரூ.300 கோடி நிதியுதவி எப்படி பெறுகிறது. வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தார். அவரிடம் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கெஞ்சியதால் தடையை நீக்கினார்’ என்றார்.
தமிழக மாதிரி ஆய்வு: கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது, ‘ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளை அரசு பள்ளி, பொது நிறுவன வளாகங்களில் நடத்துவதை தமிழக அரசு தடை செய்துள்ளது. தமிழகத்தின் நடவடிக்கை குறித்து கேட்டறிய தலைமை செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.