Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

செகன்ட் ஹேண்ட் மின்சார கார், பைக் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை..!

பழைய கார்களை வாங்க விரும்புபவர்கள், காரின் வயது மற்றும் மைலேஜ் பற்றி மட்டுமே அதிகம் யோசிக்கின்றனர். ஆனால், அதிகமான மக்கள் மின்சார கார்களுக்கு மாறுவதால், காரின் பேட்டரியின் ஆரோக்கியத்தை ஆராய்வது இன்னும் முக்கியமானதாகிவிட்டது. அந்த பேட்டரி முந்தைய உரிமையாளரால் எப்படி கையாளப்பட்டது? உதாரணமாக, கடைசி உரிமையாளர் அதை பெரும்பாலும் ‘ஃபாஸ்ட் சார்ஜ்’ முறையில் 100% வரை சார்ஜ் செய்தாரா? ஏனெனில், காரின் பேட்டரியின் ஆயுளை ‘ஃபாஸ்ட் சார்ஜ்’ முறை குறைக்கலாம். பேட்டரி பிரச்னைகள் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களை வாங்குவதில் சில நுகர்வோர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பேட்டரி பகுப்பாய்வு நிறுவனங்கள் பழைய மின்சார வாகனங்களின் பேட்டரியின் ஆரோக்கியத்தை அதிக துல்லியத்துடன் வெளிப்படுத்த முடியும் என்று கூறுகின்றன.

மேலும் சில மின்சார வாகனங்கள், பலர் கணித்ததைவிட நீண்ட காலம் நீடிக்கும் என்று தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். டன்ஸ்டனின் நிசான் லீஃப் காரை எடுத்துக்கொள்ளுங்கள். இது, பெரும்பாலான மின்சார வாகனங்களில் காணப்படும் அதிநவீன, திரவ அடிப்படையிலான பேட்டரி குளிரூட்டும் அமைப்பு இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு மின்சார வாகனம். நிசான் நிறுவனம் சமீபத்திய லீஃப்களில் இந்த வசதியை கொண்டிருந்தாலும், முந்தைய மாடல்களின் வரம்புகள் ஆண்டுதோறும் கணிசமாக குறைந்து வருவதாக அமெரிக்க காப்பீட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான நிம்பிள்ஃபின்ஸ் பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், டன்ஸ்டன் பதற்றமடையவில்லை. ‘‘நான் எனது இரண்டு மின்சார வாகனங்களையும் 100% சார்ஜ் செய்கிறேன், அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை” என்று அவர் கூறுகிறார்.

பயன்படுத்தப்பட்ட மின்சார வாகன சந்தையில் உள்ளவர்கள் பேட்டரி தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரியாவை சேர்ந்த நிறுவனமான அவிலூ (Aviloo), அதற்கு ஒரு தீர்வு இருப்பதாக கூறுகிறது. ‘‘ஒரு பேட்டரியின் ஆரோக்கியத்தை நாங்கள் முற்றிலும் சுயாதீனமாக தீர்மானிக்க முடியும்” என்று அதன் தலைமை தயாரிப்பு அதிகாரி பேட்ரிக் ஷாபஸ் கூறுகிறார். சந்தையில் உள்ள பல பேட்டரி பகுப்பாய்வு வணிக நிறுவனங்களில் அவிலூ... வும் ஒன்றாகும். பிரிட்டனின் முக்கிய கார் விற்பனை நிலையமான ‘பிரிட்டிஷ் கார் ஆக்ஷன்ஸ்’-க்கு பேட்டரி ஆரோக்கிய சான்றிதழ்களை வழங்கும் அவிலூ நிறுவனம், இரண்டு தீர்வுகளை வழங்குகிறது. ஒரு பிரீமியம் சோதனை உள்ளது, அங்கு மின்சார கார் உரிமையாளர்கள் தங்கள் காரில் ஒரு சிறிய டேட்டா லாக்கிங் பெட்டியை சொருகுவார்கள். இதனால், அவர்கள் காரை சில நாட்களுக்கு பயன்படுத்தும்போது பேட்டரி செயல்திறனை கண்காணிக்க முடியும், அதாவது 100% சார்ஜில் இருந்து 10% வரை.

அல்லது, அவர்கள் ஒரு விரைவான ‘ஃபிளாஷ் சோதனை’யை தேர்வு செய்யலாம். இது காரின் பேட்டரி மேலாண்மை மென்பொருளில் இருந்து தரவை எடுப்பதற்கு வேறு பெட்டியை பயன்படுத்துகிறது. பின்னர், அதை ஒரு கணினி மாதிரியின் உதவியுடன் பகுப்பாய்வு செய்கிறது. ‘‘இதை நாம் இரண்டு நிமிடங்களுக்குள் செய்ய முடியும்” என்கிறார் ஷாபஸ். பிரீமியம் சோதனையானது பேட்டரி சார்ஜ் குறைவதை உன்னிப்பாக கவனித்து, மின்னோட்டம் அல்லது மின்னழுத்தத்தில் ஏற்ற இறக்கங்களை எடுத்துக்கொள்கிறது. மேலும், பேட்டரியில் உள்ள தனிப்பட்ட செல்களின் நிலை குறித்த விரிவான தகவல்களை வெளிப்படுத்த முடியும் என்று அவிலூ நிறுவனம் கூறுகிறது.

80% க்கும் குறைவான ஆரோக்கியம் கொண்ட பேட்டரிகள் அவ்வளவு பயனுள்ளவை அல்ல என்ற பொதுவான கருத்தை அவிலூவின் தலைமை நிர்வாகி மார்கஸ் பெர்கர் ஏற்கவில்லை. ‘‘80% க்கும் குறைவான ஆரோக்கியம் கொண்ட ஒரு மின்சார கார் இன்னும் ஒரு சிறந்த காராக இருக்கலாம். அதற்கு (பொருத்தமான) விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்” என்கிறார்.

சில நுகர்வோரின் எச்சரிக்கை இருந்தபோதிலும், சமீபத்திய ஆண்டுகளில் பேட்டரி தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான சிஆர்யூ-வின் பேட்டரி துறை தலைவர் மேக்ஸ் ரீட் கூறுகிறார். பழைய பேட்டரிகள் 500 முதல் 1,000 [சார்ஜிங்]சுழற்சிகள் வரை நீடிக்கும் என்று அவர் விளக்குகிறார். இப்போது வரும் புதிய மின்சார கார் பேட்டரிகள் சிலவற்றில் 10,000 சுழற்சிகள் வரை உள்ளன. முன்னர் குறிப்பிட்ட மின்சார வாகனங்களுக்கு என வடிவமைக்கப்பட்ட பேட்டரிகள், இப்போதும் பயனுள்ளதாக இருக்கும் என்று டோர்செட்டில் உள்ள ‘செகண்ட் லைஃப் மின்சார வாகன பேட்டரிஸ்’-ஐ சேர்ந்த பால் சாண்டி கூறுகிறார்.