Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது : செபி எச்சரிக்கை

மும்பை : அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான SEBI எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ""மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் எலெக்ட்ரானிக் தங்க ரசீதுகள் வழங்கும் கான்ட்ராக்ட்டுகள், தங்கம் இ.டி‌.எஃப்கள் ஆகியவை செபியால் அங்கீகரிக்கப்பட்ட தங்கம் முதலீடுகள்.இவற்றில் செபியில் பதிவுசெய்த இடைத்தரகர்கள் மற்றும் செபியால் பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மூலம்‌ முதலீடு செய்யலாம்.

தற்போது டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்கப் பொருள்கள் விற்கப்படுவதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. இந்த டிஜிட்டல் தங்கங்கள் பிசிக்கல் தங்கத்திற்கு மாற்றாக சந்தைப்படுத்தப்படுகின்றன.இவை செபியால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. இவை செபி அங்கீகரித்த தங்க முதலீடுகளில் இருந்து முற்றிலும் மாறானது.இந்தத் தங்க முதலீடுகள் செபியின்‌ கண்காணிப்பிற்கு உட்பட்டதில்லை. இந்த டிஜிட்டல் தங்க முதலீடுகளில் ரிஸ்க் உள்ளது" என்று எச்சரித்துள்ளது.