காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தின் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சீழ்வீராணம் கிராமத்தில் வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளான்மை உதவி இயக்குனர் சண்முகம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்வுசெய்யபட்ட கிராமங்கள் குறித்தும், மண்னுயிர் சார்ந்து மன்னுயிர் காப்போம், திட்டம் குறித்தும், மண் வாத்திற்கு பயறு வகை பயிர்களின் முக்கியத்துவம் குறித்தும், வரப்பு பயிர் மற்றும் ஊடுபயிரின் பயன்கள், குறித்தும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து சாகுபடி செய்யாத நிலங்களில் உள்ள புதர்களை அகற்றம் செய்யும் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். பருவ காலத்திற்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
துணை வேளாண்மை அலுவலர் கருப்பையா, வேளாண் கிடங்கில் உள்ள விதை மற்றும் உயிர் உரங்கள், இடுப்பொருட்களின் இருப்பு நிலை, நுண்ணுட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். இதில் உதவி வேளாண் அலுவலர் சரவணகுமார், வேளாண் திட்டங்கள் குறித்தும், ஆவணங்கள் குறித்தும் விளக்கினார்.
அப்போது கீழ் வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், வேளாண்மை உதவி அலுவலர் (விற்பனைத் துறை), கோபி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.