Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழவேற்காட்டில் 5 நாட்களுக்கு முன் கடலில் மூழ்கிய மீனவர் சடலம் கரை ஒதுங்கியது

பொன்னேரி: பொன்னேரி அருகே பழவேற்காடு, திருமலை நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் பிரேம்குமார் (30). மீனவர். இவர், கடந்த 31ம் தேதி தனது நண்பர்களுடன் இயந்திர படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார். நடுக்கடலில் இன்ஜினின் துடுப்பு உடைந்து போனதால், பிரேம்குமார் கடலுக்குள் தவறி விழுந்து நீருக்குள் மூழ்கினார். அவருடன் சென்ற நண்பர்கள் கரைக்கு திரும்பி வந்து, இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் மற்றும் பொன்னேரி தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மீனவர்களுடன் தீயணைப்பு துறையினர் கடந்த 5 நாட்களாக தேடியும் மீனவர் பிரேம்குமார் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று மாலை காட்டுப்பள்ளி அருகே காலாஞ்சி கடற்கரை பகுதியில் மீனவர் பிரேம்குமாரின் அழுகிய சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசாருக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, அழுகிய நிலையில் மீனவர் பிரேம்குமாரின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அச்சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.