புதுடெல்லி: மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்க வேண்டுமா என்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் பதவி காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தலித் சமூகத்தில் இருந்து இந்து, சீக்கியம், பவுத்தம் அல்லாத பிற மதங்களுக்கு மாறி வரலாற்று ரீதியான தங்களுடைய அடையாளத்தை தலித்துகளின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 2022ல் விசாரணை ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி விசாரணை ஆணையம் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்காததால் மேலும் ஒரு ஆண்டுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பு இந்தாண்டு அக்டோபர் 10ம் தேதியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டதால் ஆணையத்தின் பதவி காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
+
Advertisement
