Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சரும பளபளப்புக்கு ஸ்க்ரப் செய்யுங்கள்!

முகத்தில் இருக்கும் இறந்த செல்களை (dead skin cells) எவ்வித கடினமான கெமிக்கல் இல்லாமல் இயற்கையாக நீக்கலாம் (exfoliation ). இதற்கு தினந்தோறும் நம் வீட்டு சமையல் அறையில் பயன் படுத்தும் பொருட்களே போதுமானது.

1. சர்க்கரை ஸ்க்ரப்

* 1 டீஸ்பூன் சர்க்கரை + 1 டீஸ்பூன் தேன் சேர்த்து மெதுவாக முகத்தில் மசாஜ் செய்யவும்.

* இது தோளில் உள்ள இறந்த செல்களை நீக்கி புத்துணர்வு கொடுக்கும்.

2. ஓட்ஸ் பேக்

*ஓட்ஸ் பவுடரை தயிர் அல்லது பால் சேர்த்து பேஸ்ட் போல தயாரிக்கவும்.

*இதை முகத்தில் தடவி, உலர்ந்த பிறகு மெதுவாக மசாஜ் செய்து கழுவவும்.

*இது வறண்ட சருமத்துக்கு நல்லது.

3. காபி ஸ்க்ரப்

*காபி பவுடர் + சிறிது தேங்காய் எண்ணெய்/தேன் கலந்து முகத்தில் மசாஜ் செய்யலாம்.

*இந்த ஸ்கிரப் வெயிலால் உண்டான கருமையை நீக்கி பளிச்சென சருமத்தில் தோற்றம் கொடுக்கும்.

4. எலுமிச்சை & சர்க்கரை

*எலுமிச்சைச் சாறு + சர்க்கரை வைத்து 2 நிமிடங்கள் மட்டும் ஸ்க்ரப் செய்யவும்.

*அதிகமாக பயன்படுத்தக் கூடாது, மிகவும் மென்மையான அல்லது சுலபமாக அலர்ஜி ஏற்படும் சருமத்தில் இந்த ஸ்க்ரப் மட்டும் பயன்படுத்தும் முன் சரும சோதனை செய்து கொள்ளவும்.

5. அலோவேரா ஜெல்

*அலோவேரா ஜெல்லை மெதுவாக முகத்தில் மசாஜ் செய்தால் இறந்த செல் நீங்கும். அதே சமயம் சருமத்துக்கு குளிர்ச்சி தரும்.

*சருமத்தில் உண்டான காயங்களை குணப்படுத்தும். மேலும் முகப்பருக்களை நீக்கி பருக்களால் உண்டான தழும்புகளையும் சரி செய்யும்.

கவனிக்க வேண்டியவை

*வாரத்திற்கு 12 முறை மட்டுமே செய்யவும்.

*ஸ்க்ரப் செய்த பிறகு நிச்சயமாக மாய்ஸ்ரைசர் பயன்படுத்த வேண்டும்.

*சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்தும் பொழுது அதிகம் சருமத்தில் உரசக்கூடாது.

*ஸ்கிரப் செய்து கழுவியப் பின் உங்கள் சருமத்திற்கு ஏற்ற முகத்திற்கான மாஸ்க் பயன்படுத்தலாம்.

- கவின்