மதுரை விமான நிலையத்தில் பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: பாஜ, அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. தம்பி விஜய் சமீப காலமாக பெரிய கூட்டம் கூட்டுகிறார். அவரிடம் ஒன்று கூற வேண்டும். அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதித்தருபவர் சரியாக எழுதிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் தம்பி விஜய் ரயில்வே, நாகப்பட்டினம் மீனவர்கள் குறித்து தவறான தகவல்களை சொல்கிறார். அவரது ஸ்கிரிப்ட் ரைட்டர் இவற்றை மீண்டும் சரி பார்க்க வேண்டும்.
அவருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்களை போன்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். திடீரென்று அரசியலுக்கு வந்தவுடன் என்னவென்றே புரியாமல் இருக்கிறார் விஜய். வருபவர்கள் அவரை பார்க்க வருகிறார்கள், வாக்களிக்க வரவில்லை. வேலினை கையில் வாங்கும் போது தம்பி விஜய் செருப்புகளை கழற்றி இருக்க வேண்டும். அதை செய்யாதது அவரது தவறு. ஆரம்ப காலம் என்பதால் அவருக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். மக்கள் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். அதை தொண்டர்களுக்கும் அவர் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.