இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்கவுட் ரேஞ்ச் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 999 சிசி ஸ்பீடு பிளஸ் வி-டிவின் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 109 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 கியர் பாக்ஸ் உள்ளது. ஸ்டாண்டர்டு, லிமிடெட் மற்றும் லிமிடெட் பிளஸ் டெக் என 3 வேரியண்ட்கள் உள்ளன.
சிறிய டிஜிட்டல் டிஸ்பிளே, எல்இடி லைட்டிங், டூயல் சானல் ஏபிஎஸ், குரூஸ் கண்ட்ரோல், யுஎஸ்பி சார்ஜிங் வசதி இடம் பெற்றிருக்கும். வேரியண்டுக்கு ஏற்ப இந்த அம்சங்கள் மாறுபடும். லிமிடெட் பிளஸ் டெக் வேரியண்டில் வண்ண டிஎப்டி டிஸ்பிளே, கீலெஸ் இன்ஜின், புளூடூத் இணைப்பு வசதி இடம் பெற்றிருக்கும். துவக்க ஷோரூம் விலையாக ஸ்கவுட் சிக்ஸ்டி பாபர் சுமார் ரூ.12.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான சூப்பர் ஸ்கவுட் சுமார் ரூ.16.15 லட்சம்.