சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
கூட்டணியை பற்றி பேச இன்னும் காலமிருக்கிறது. மக்கள் நலனுக்காக எந்த எல்லை வரையும் செல்வோம் என விஜய் சொன்னது மக்கள் நலன் சார்ந்து போராட்டங்கள் பற்றியதுதான். அதிமுகவை விமர்சிக்கவில்லை என கேட்கிறீர்கள். தேவை ஏற்படும்போதுதான் ஒரு கட்சியை விமர்சிக்க முடியும். மாநாட்டிலேயே எங்களின் அரசியல் எதிரி யார் கொள்கை எதிரி யார் என்பதை அறிவித்துவிட்டோம். பாஜவுடன் 100 சதவீதம் கூட்டணி இல்லை. கூட்டணி குறித்து எங்களின் தலைவர் விஜய்தான் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

