சென்னை: கடந்த 21ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு ஈடாக இன்று சென்னை மாவட்டப் பள்ளிகள் இயங்க உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை ஈடுசெய்யும் வகையில் 25ம் தேதி பணி நாளாக செயல்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, சென்னை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் இன்று இயங்கும். கடந்த 21ம் நாளான செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
+
Advertisement
