ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் கடந்த மாதம் தலைமை ஆசிரியராக பாரத் அம்பேத்கார் (56) என்பவர் பொறுப்பேற்றார். இவர் பள்ளி வளாகத்தில் அவ்வப்போது மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் அதே பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பத்தூர் எஸ்பி சியாமளாதேவி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மலைவாசன், மாதனூர் வட்டார கல்வி அலுவலர் பீட்டர் ஆகியோர் வரவழைக்கப்பட்டு நேற்று உம்ராபாத் போலீஸ் நிலையத்தில் பாரத் அம்பேத்காரிடம் விசாரித்தனர். இ
தையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் மலைவாசன் அளித்த புகாரின்பேரில், உம்ராபாத் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்காரை கைது செய்தனர். கைதான சில மணிநேரங்களில் தலைமையாசிரியர் பாரத் அம்பேத்காரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மலைவாசன் அதிரடியாக உத்தரவிட்டார்.