சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6- 9ம் வகுப்பு வரை பயிலும் மன்ற செயல்பாடுகளை மகிழ் முற்றம் மாணவர் குழுக்கள் மூலமாக ஒவ்வொரு மாதமும் நடைமுறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான இலக்கிய மன்றம், வினாடி-வினா போட்டிகளை பள்ளி அளவில் நாளை (ஜூலை 21) முதல் ஜூலை 31ம் தேதி வரை திட்டமிட்டு நடத்த வேண்டும். இந்த போட்டிக்கான தலைப்புகள், மதிப்பீடு விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. போட்டிகளின் முடிவுகள் அன்றைய தினமே அறிவிப்பதுடன் வெற்றியாளர்களின் விவரங்களை ஜூலை 31ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement