ரூ.127.57 கோடி செலவில் 5,322 பள்ளிகளில் 6,672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!
சென்னை: ரூ.127.57 கோடி செலவில் 5,322 பள்ளிகளில் 6,672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்தது முதலே அரசு பள்ளிகளில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.159 கோடியில் 2,232 அரசு பள்ளிகளில் 2,236 ஆய்வகங்கள் அமைக்கவும் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2026-27க்குள் 6,672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 37,626 அரசு பள்ளிகளில் 30,774 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
