Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

‘அறிஞர்கள் அவையம்’ கலந்துரையாடல் முதல்வர் வாழ்த்து

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைக்கும் ‘அறிஞர்கள் அவையம்’ என்ற கலந்துரையாடல் தொடரின் முதல் நிகழ்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைக்கும் ‘அறிஞர்கள் அவையம்’ என்ற கலந்துரையாடல் தொடரின் முதல் நிகழ்வு இன்று தொடங்கியது! மகிழ்ச்சி!

தமிழ்மொழியில் பல்வேறு துறைகள் சார்ந்து இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் - இனி நிகழவேண்டியவை குறித்தும், துறைசார்ந்த அறிஞர்களின் கருத்துகேட்கும் தமிழ் வளர்ச்சித் துறையின் இந்தத் திட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.