பட்டியல், பழங்குடியினர் நடத்தும் நிறுவனங்களிடம் 5% பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசு
சென்னை: பட்டியல், பழங்குடியினர் நடத்தும் நிறுவனங்களிடம் 5% பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். 5சதவீதம் கொள்முதல் செய்தது தொடர்பான டெண்டர் விவரங்களை 3 மாதத்திற்கு ஒருமுறை அறிக்கையாக தர வேண்டும் என அனைத்து மாவட்ட அட்சியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு செலவீன செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் இ-டெண்டர் மூலம் பொருட்களை கொள்முதல் செய்கின்றன.