துபாய்: சவுதி அரேபியாவின் புதிய மூத்த முப்தியாக ஷேக் சலேஹ் பின் பவ்சான் அல் பவ்சான் (90)நியமிக்கப்பட்டுள்ளார். ஷேக் சலேஹ் பின் பவ்சான் அல் பவ்சான் இந்த பதவியை பொறுப்பேற்றார் என்று அரசு நடத்தும் சவுதி பத்திரிக்கை தெரிவித்துள்ளது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பரிந்துரையின் அடிப்படையில் மன்னர் சல்மான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கிராண்ட் முப்தி பதவியை வகித்த ஷேக் அப்துல் அஜிஸ் பின் அப்துல்லா அல் ஷேக் கடந்த செப்டம்பர் மாதம் காலமானார்.
+
Advertisement
