2026 மே 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம்: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் தகவல்
சென்னை: 2026 மே 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து, இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் இருந்து ஏராளமானோர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்தமுறை அதிகளவு பதிவு செய்தனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து 5870 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 2026 மே 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என்று சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோன்று மறு மார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஜூன் 5ம் தேதியில் இருந்து 8ம் தேதி வரை பயணம் மேற்கொள்ளலாம். இந்த ஆண்டு 2026 அனைவரும் மகிழ்ச்சியாக ஹஜ் பயணம் சென்று திரும்ப மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.