சாத்தான்குளம் தந்தை-மகன் கொலையில் கூட்டுசதியா என விசாரிக்க வேண்டும் என சிபிஐ கூறுவது சரியா? : ஐகோர்ட் நீதிபதி கேள்வி
மதுரை : சாத்தான்குளம் தந்தை-மகன் கொலையில் கூட்டு சதியா என விசாரிக்கவேண்டும் என சிபிஐ கூறுவது சரியா? என்று ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். எல்லா சாட்சிகளையும் விசாரித்து முடிக்கப்பட்ட பிறகு சிபிஐ கூறுவது ஏற்புடையதா? என்று கேட்ட நிலையில், சிபிஐ தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்ட ஐகோர்ட் கிளை வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது.
