சென்னை: திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித்தொகையை வழங்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் கடந்த 29ம்தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையிலும் தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், 4 நாட்கள் நீடித்த உண்ணாவிரத போரட்டத்தை செந்தில் சசிகாந்த் நேற்று முடித்துக்கொண்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மருத்துவமனைக்கு சென்று பழச்சாறு கொடுத்து நிலையில் அதை ஏற்றுக்கொண்ட செந்தில் சசிகாந்த் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வேண்டுகோளை ஏற்று சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை முடித்தார்.
ராகுல்காந்தி கேட்டுக்கொண்டதை அடுத்து சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு சசிகாந்த் செந்தில் சிகிச்சை பெற்ற நிலையில் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.