திருவள்ளூர்: எம்.பி. சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரத போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். சசிகாந்த் செந்திலுக்கு ராகுல் காந்தி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தரக் கோரி சசிகாந்த் செந்தில் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரத போராட்டத்துக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
+
Advertisement