திருவள்ளூர்: சசிகாந்த் செந்தில் எம்.பி.யின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தர கோரி 2வது நாளாக சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போராட்டம் அரசியல் பற்றியது அல்ல; கல்வி மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியது என்றும், கல்வி நிதி தராத ஒன்றிய அரசின் பிடிவாத நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்புவோம் என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
+
Advertisement