பாட்னா: பாட்னாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டி: சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நிகழ்வாக மாபெரும் அணி வகுப்பு நிகழ்ச்சிக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. குடியரசு தின அணி வகுப்பு போன்று ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி இந்த மாபெரும் அணி வகுப்பு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடத்தப்படும். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். இதைத்தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி(நாளை) முதல் 15ம் தேதி வரை இந்திய திருவிழா கொண்டாடப்படும்” என கூறினார்.
+
Advertisement 
 
  
  
  
   
