Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

10 ஆயிரம் சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்கும் வகையில் சென்னையில் வள்ளலார் சர்வதேச மாநாடு: அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல்

வடலூர்: சென்னையில் நவம்பர் அல்லது டிசம்பரில் வள்ளலார் சர்வதேச மாநாடு நடத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். கடலூர் மாவட்டம் வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நேற்று நடந்த வள்ளலாரின் 203வது வருவிக்க உற்ற நாள் விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சன்மார்க்க கொடியை ஏற்றி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டி: வள்ளலாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைப்பதற்கு ரூ.99.90 கோடியை அரசு நிதியாக வழங்கினார். இந்த சர்வதேச மையம் அமைக்க பல்வேறு நீதிமன்ற வழக்குகளுக்கு பிறகு “பி” சைட் பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, வரும் டிசம்பர் மாதம் வள்ளலாரின் அருந்தவ சீடர்களுக்கு அர்ப்பணிக்கப்படும்.

மற்றொரு பகுதியான “ஏ” சைட் கட்டுமான பணி மேற்கொள்வதற்கு வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்ற உத்தரவிற்கு பின் அந்த பணிகளும் மேற்கொள்ளப்படும். சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதிக்கு வள்ளலார் நகர் என்று பெயர் சூட்டியதோடு, அந்த பகுதியிலுள்ள பேருந்து நிலையத்திற்கும் அவர் பெயரை சூட்டி பெருமை சேர்த்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

அவரது வழியில் முதலமைச்சர் வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் ரூ.6 கோடி செலவில் பயணிகளின் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்கிற வகையில் உருவாக்குகின்ற பணியை தொடங்கி வைத்துள்ளார்.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் சென்னையில் மிகப்பெரிய அளவில் 10 ஆயிரம் சன்மார்க்க அன்பர்கள், குறிப்பாக 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கின்ற வள்ளலார் சர்வதேச மாநாட்டை நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அம்மாநாட்டில் வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கின்ற 25 சன்மார்க்கிகளுக்கு பட்டயம் வழங்கி சிறப்பு செய்திடவும், வள்ளலார் குறித்த நூலும் வெளியிடப்படவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.