*ராணி ஸ்ரீகுமார் எம்பி, ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் 2.0 கழிவுநீர் சேகரிப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா, நகராட்சி சேர்மன் கவுசல்யா, சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்செல்வம், அரசு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக யூனியன் அலுவலகத்தை ராணி ஸ்ரீகுமார் எம்பி, ராஜா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.