தென்காசி: சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,500க்கு விற்பனையாகி வருகிறது. பனிமூட்டத்தால் மல்லிகைப் பூ வரத்து குறைந்ததால் வழக்கத்தை விட ரூ.1,000 வரை அதிகமாக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 2,500க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தென்காசி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு பூக்களை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதாலும் மல்லிகை பூவின் விளைச்சல் குறைந்துள்ளது.
இதனால் சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு வரக்கூடிய மல்லிகை பூ குறைந்ததாலும், இந்த மாதத்திற்கான கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதாலும் மல்லிகை பூவின் விலை வரலாறு காணாத விலையேற்றம் ஏற்பட்டுள்ளது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த காலங்களிலும் சில சமயங்களில் இது போன்ற விலை ஏற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த சில நாட்களில் இதே போன்ற விலை உயர்வுகள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக, சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி பிச்சிப்பூ விலை ரூ. 2,100 இலிருந்து ரூ. 3,000 ஆக உயர்ந்தது. ங்கரன்கோவில் மலர் சந்தைக்கு குறைந்த அளவு பூக்கள் வந்ததே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவு பூக்கள் கொள்முதல் செய்யப்படுவதால் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


