சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் முன்வைத்தனர். பணி பாதுகாப்பு எப்போதுமே அவர்களுக்கு உண்டு என பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறோம். முன் எப்போதும் இல்லாத வகையில் பணியில் பாதுகாப்பு இருக்கிறது. பல்வேறு சலுகைகளும் உள்ளன.
அவர்கள் பணியில் சேர வேண்டும். பிற கோரிக்கைகள் குறித்து ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம். மாநகராட்சிக்கு தூய்மைப் பணியாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை ஒவ்வொரு முறையும் வேறுபாடாக இருந்தது. தூய்மை பணியாளர்கள் பணியில் சேருவதற்கான அவகாசம் ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தலாம். மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.