சென்னை: தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம். பணியின் போது மரணம் அடையும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம். நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் என தூய்மைப் பணியாளர்களுக்கான அரசின் இத்திட்டங்களை தொய்வு இன்றி செயல்படுத்த நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார்.
+
Advertisement