Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சம்பா நெற்பயிரில் தண்டு துளைப்பான் பாதிப்பு வேளாண் அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆய்வு

*விவசாயிகளுக்கு ஆலோசனை

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டத்தில் 1,37,530 ஹெக்டேர் பரப்பிற்கு சம்பா, தாளடி பருவ நெற் பயிர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை சுமார் 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிற்கு சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.

தற்சமயம் நிலவும் பருவ நிலை காரணமாகவும், மேகமூட்டத்துடன் வானிலை காணப்படுவதாலும், பூச்சி தாக்குதல் மாவட்டத்தில் சில இடங்களில் தென்படுகிறது. மேலும், ஆழ்துளை கிணற்று பாசனம் உள்ள பகுதிகளில் பாசியினாலும் பாதிப்பு தென்படுகிறது.

இதனால் சில இடங்களில் நெற்பயிர் காய்ந்து வருவதாக தெரியவருகிறது.இந்நிலையில், மன்னார்குடி வட்டாரம் ஏத்தக்குடி கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பெயரில் தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதலும் மற்றும் பாசி படர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி கருகிய நிலையில் உள்ள நெற்பயிர்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலசரஸ்வதி தலைமையில் துணை இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, துணை இயக்குனர் விஜயலட்சுமி, ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள்குழு, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் குழு, மன்னார்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மீனா மற்றும் வேளாண் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். விவசாயிகளுக்கு உரிய பரிந்துரைகளை வழங்கினர்.

இதுகுறித்து ஆய்வு குழுவினர் கூறியது: பாசிகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க 2 கிலோ காப்பர் சல்பேட் டை, 20 கிலோ மண்ணில் கலந்து வய லில் இடவேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளான கார்டாப்ஹைட் ரோகுளோரைடு 50 சதவீதம் எஸ்பி மருந்தினை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீருக்கு 400 கிராம் அல்லது குளோ ரோ டிரானில்பிரோலால் 18.5 எஸ்சி 60 மில்லி 200 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து இலைவழி தெளிப்பாக, தண்டின் அடிப்பகுதி நன்கு நனையும்படி தெளிக்கவேண்டும்.

குருத்துப்பூச்சியின் தாக்குதல் ஏதும் தென்படாத நிலையில் வைக்கோல் நிற முடைய தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டம் தென்பட்டால் டிரைகோ கிரம்மா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை ஹெக்டேருக்கு 5 சிசி (ஒரு இலட்சம் முட்டைகள்) என்ற அளவில் கட்ட வேண்டும்.

இந்த அட்டைகளை ஒருவார இடைவெளியில் மூன்று முறை கட்டலாம்.மேலும், தேவைக்கு அதிகமாக தழைச்சத்து உரங்கள் இடுதலை தவிர்த்து, வரப்புகளை சீராக்கி களைகளின்றி தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

தொடர்ச்சியாக வயல்களில் நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட கதிர்களை பிடுங்கி அகற்ற வேண்டும். அறுவடை செய்தவுடன் நிலத்தினை நன்கு உழவேண்டும். விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இத்தகைய பூச்சி கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்துவதோடு நெல் வயல் பகுதிகளுக்கு இப்பூச்சிகள் வராமல் தடுக்கலாம் என்றனர்.