லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மற்றும் கன்னோஜ் தொகுதி எம்பி அகிலேஷ் யாதவ். இவரது பேஸ்புக் கணக்கில் இவரை சுமார் 80லட்சம் பேர் பின்தொடருகின்றனர். நேற்று முன்தினம் காலை திடீரென அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர் சில மணி நேரங்களில் செயல்படத்தொடங்கியது. அகிலேஷ் யாதவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் முடக்கியதாகவும், அரசினால் இல்லை என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
+
Advertisement